Lyrics :
ஆண் : பொண்ணு வெளையிற பூமியடா விவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்தோமடா…. உண்மையா உழைக்கிற நமக்கு எல்லா நன்மைகளும் நாடி வந்து கூடுதடா…..ஆஅ…..ஆ…..ஆஅ….ஹா….ஆ….ஆ…ஆ…. ஆண் : மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு ஆண் : மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி ஆண் : மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு ஆண் : ஆத்தூரு கிச்சடி சம்பா ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு தண்ணிய ஏத்தம் புடிச்சு எறைச்சி போடு செல்லக்கண்ணு நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு தண்ணிய ஏற்றம் புடிச்சு எறைச்சி போடு செல்லக்கண்ணு ஆண் : கருதை நல்லா வெளைய வச்சி மருத ஜில்லா ஆளை வச்சி…. கருதை நல்லா வெளைய வச்சி மருத ஜில்லா ஆளை வச்சி…. அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி அளந்து போடு செல்லக்கண்ணு ஆண் : என்றா பல்லக்காட்ரீங்க அட வேலைய பாருங்க ஆண் : கருதை நல்லா வெளைய வச்சி மருத ஜில்லா ஆளை வச்சி…. அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு நல்லா அடிச்சி தூத்தி அளந்து போடு செல்லக்கண்ணு ஆண் : பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே…..ஆஅ…..ஆஅ….ஆ… ஆண் : பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு செல்லக்கண்ணு விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு செல்லக்கண்ணு ஆண் : சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு ஆண் : சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு![]()