Lyrics :
கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே அன்பு என்னும் பாட்டிசைத்து கண்டதென்ன வாழ்க்கையிலே பார்வையில் யாருமே மனித ஜாதி தான் பழகிப் பார் பாதிப் பேர் மிருக ஜாதி தான் கூண்டை விட்டு வெளியில் வந்து நான் வளர்க்கும் பூச்செடியில் முட்கள் மட்டும் பூப்பதென்ன பாவமா சாபமா காலத்தின் கோலமா கால் நடக்கும் பாதையெல்லாம் கற்கள் குத்தி வலிப்பதென்ன யாரிதன் காரணம் தெய்வம் தான் கூறணும் வைரக்கல்லை நான் கொடுத்தால் வாங்கிக்கொள்ளும் உலகமே உப்புக்கல்லை எனக்களித்து ஒப்புக்கொள்ளச் சொல்லுமே நெய்யை விட்டு தீபம் ஏற்றினான் கையைச் சுட்டு நன்றி காட்டுதே...ஓ... கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே அன்பு என்னும் பாட்டிசைத்து கண்டதென்ன வாழ்க்கையிலே பார்வையில் யாருமே மனித ஜாதி தான் பழகிப் பார் பாதிப் பேர் மிருக ஜாதி தான் கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே தெய்வத்துக்கு ஆறு முகம் மானிடர்க்கு நூறு முகம் மெய்யெது பொய்யெது யாரதை கண்டது பாலும் இங்கு வெள்ளை நிறம் கல்லும் இங்கு வெள்ளை நிறம் பாலெது கல்லெது பேதம் யார் கண்டது நேசம் வைத்த யாருக்குமே நெஞ்சமெல்லாம் காயம் தான் பாசம் வைத்த கண்களிலே பார்ப்பதெல்லாம் மாயம் தான் ஏறிச் சென்று கால்கள் உதைக்குது ஏற்றி விட்ட ஏணி சிரிக்குது கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே அன்பு என்னும் பாட்டிசைத்து கண்டதென்ன வாழ்க்கையிலே பார்வையில் யாருமே மனித ஜாதி தான் பழகிப் பார் பாதிப் பேர் மிருக ஜாதி தான் கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே![]()