Lyrics :
பேசு மனமே பேசு பேதை மனமே பேசு நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு பேசு மனமே பேசு பேதை மனமே பேசு நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு கரையேறி ஆடிடும் அலைகள் கடலோடு மறுபடி ஓடும் அலைக் கூட நாணம் கொண்டாடும் அது போல பெண்மை கொண்டாடும் மூடிய ஆடையும் நாணிய பார்வை நாடகமும் மௌனமும் பெண்மையின் சீதன செல்வமன்றோ (பேசு மனமே) கொடியோடு தோன்றிய மலர்கள் குழலோடு சேருவதென்ன ஒரு வீடு தோன்றிய பெண்கள் மறு வீடு தேடுவதென்ன பந்தமும் பாசமும் நேசமும் அன்னை இல்லத்திலே சொந்தமும் காதலும் இன்பமும் கொண்ட உள்ளத்திலே (பேசு மனமே) மலைப் போல தோன்றிய துன்பம் பனிப் போல மாறுவதுண்டு கனவாக தோன்றிய வாழ்வு நினைவாக காணுவதுண்டு போனது போகட்டும் பார்வையை இன்று மாற்றிவிடு பூமியில் நீ ஒரு ஆனந்த தீபம் ஏற்றி விடு (பேசு மனமே)![]()